வென் ஐந்தாவது தங்கம்

வென் ஐந்தாவது தங்கம்

1 mins read

நோம்­பென்: தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் பெண்­க­ளுக்­கான 100 மீட்­டர் எதேச்­சை­பாணி பிரி­வில் தொடர்ந்து ஐந்­தாம் முறை­யா­கத் தங்­கம் வென்று சாதித்­துள்­ளார் சிங்­கப்­பூ­ரின் குவா டிங் வென்.

பிலிப்­பீன்­சில் 18 ஆண்­டு­க­ளுக்­கு­முன் நடந்த தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் அறி­மு­க­மா­னார் இப்­போது 30 வய­தா­கும் வென்.

ஒட்­டு­மொத்­தத்­தில், நேற்­றைய தங்­கம் அப்­போட்­டி­களில் அவ­ருக்கு 50வது பதக்­கம். பந்­த­யத் தொலை­வைக் கடக்க அவர் 55.83 நொடி­களை எடுத்­துக்­கொண்­டார்.

அதன்­பின் நடந்த பெண்­க­ளுக்­கான 400 மீட்­டர் எதேச்­சை­பாணி பிரி­வில் தங்­க­மும் வெள்­ளி­யும் சிங்­கப்­பூர் கைசேர்ந்­தன. கான் சிங் ஹுவீ தமது தங்­கப் பதக்­கத்­தைத் தக்­க­வைத்­துக்­கொள்ள, சக சிங்­கப்­பூ­ர­ரான ஆஷ்லி லிம் வெள்­ளியை அறு­வடை செய்­தார்.

ஆண்­க­ளுக்­கான 4x100 மீட்­டர் அஞ்­சல் நீச்­ச­லி­லும் சிங்­கப்­பூர் ஆதிக்­கம் செலுத்­தி­யது. டியோங் ஸென் வெய், ஜோன­தன் டான், நிக்­க­லஸ் மகா­பீர், குவா ஸெங் வென் ஆகி­யோர் அடங்­கிய சிங்­கப்­பூர்க் குழு 3 நிமி­டம் 37.45 நொடி­கள் எனப் புதிய சாத­னை­யு­டன் தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­யது.

சிங்கப்பூர் நீச்சல் குழு இதுவரை 10 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.