5 போட்டிகளில் 12 ஓட்டங்கள்: தொடர்ந்து சொதப்பும் ரோகித் சர்மா

5 போட்டிகளில் 12 ஓட்டங்கள்: தொடர்ந்து சொதப்பும் ரோகித் சர்மா

1 mins read

மும்பை: மும்பை இந்­தி­யன்ஸ் அணித் தலை­வர் ரோகித் சர்மா கடந்த ஆண்­டி­லி­ருந்தே தொடர்ந்து சொதப்பி வரு­வது அந்த அணி ரசி­கர்­களை ஏமாற்­றம் அடை­யச் செய்­துள்­ளது.

'ஹிட்­மேன்' என ரோகித் சர்­மாவை ரசி­கர்­கள் அழைப்­பார்­கள். மும்பை அணி­யின் சொத்­தாக விளங்­கும் அவர், 2022ஆம் ஆண்டு 16 போட்­டி­களில் விளை­யாடி வெறும் 268 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்­தி­ருந்­தார். இதில் அதிக­பட்ச ஓட்­டம் 48தான். ஓர் அரை சதம்­கூட கிடை­யாது. சரா­ச­ரியே 19 ஓட்­டங்­கள்­தான். இதன் கார­ண­மாக மும்பை அணி கடந்த பரு­வத்­தில் படு­தோல்­வி­யைத் தழு­வி­யது.

தற்­போ­தும் ரோகித் சர்மா மோச­மா­கத்­தான் விளை­யாடி வரு­கி­றார். இது­வரை 11 போட்­டி­யில் விளை­யா­டியுள்ள அவர் 191 ஓட்­டங்­களை எடுத்­துள்­ளார். இதன் சரா­சரி 17 ஓட்­டங்­கள். கடை­சி­யாக ரோகித் சர்மா ஐபி­எல் தொட­ரில் விளை­யா­டிய ஐந்து போட்­டி­க­ளி­லும் மொத்­த­மா­கவே 12 ஓட்­டங்­க­ளைத்­தான் எடுத்­தி­ருக்­கி­றார். இதில் இரண்டு 'டக் அவுட்'டும் அடங்­கும். பெங்­க­ளூரு அணிக்கு எதி­ராக நேற்று முன்­தி­னம் ஆடி­ய­போது ரோகித் சர்மா 8 பந்­து­களில் 7 ஓட்­டங்­கள் எடுத்து ஹச­ரங்கா பந்துவீச்சில் வீழ்ந்தார்.