எட்டு ஆண்டுகள் கழித்து கிடைத்த வெற்றிக் கனி

2 mins read
1993a996-c3f2-4b5c-84f3-7089d5814735
-

நோம்பென்: தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளி­லேயே சிங்­கப்­பூர்­தான் மேசைப்­பந்து விளை­யாட்­டின் ஜாம்­ப­வான் என்று சிங்­கப்­பூர் ஆண்­கள் அணியினர் மீண்டும் நிரூ­பித்­துவிட்டனர்.

நேற்று பிற்­ப­கல் நடை­பெற்ற ஆண்­கள் மேசைப்­பந்து இறுதி ஆட்­டத்­தில் மலே­சி­யா­வு­டன் சிங்­கப்­பூர் அணி பொரு­தி­யது.

இதில் சிறப்­பாக விளை­யா­டிய சிங்­கப்­பூர், மலே­சி­யாவை 3-0 எனப் பந்­தாடி தங்­கப் பதக்­கத்­தைத் தமக்­குச் சொந்­த­மாக்­கிக்­கொண்­டது.

இதற்கு முன்பு ஆகக் கடைசி­யாக 2015ஆம் ஆண்­டில் நடை­பெற்ற தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­க­ளில்­தான் ஆண்­கள் மேசைப்­பந்­துப் போட்­டி­யில் சிங்­கப்­பூர் தங்­கம் வென்­றி­ருந்­தது.

இம்முறை தங்­கம் வென்ற அணி­யில் கிளே­ரன்ஸ் சியூ, கோஹன் பாங், ஐசேக் குவேக், பே குன் திங், ஈத்­தன் போ ஆகி­யோர் இடம்­பெற்­ற­னர்.

இந்த ஐவ­ரும் சிங்­கப்­பூ­ரில் பிறந்து வளர்ந்­த­வர்­கள். இவ்­வாறு உள்­ளூர் வீரர்­களை மட்­டுமே கொண்ட மேசைப்­பந்து அணி ஆக கடை­சி­யாக 1973ஆம் ஆண்­டில் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் தங்­கம் வென்­றது.

அப்­போட்டி சிங்­கப்­பூ­ரில் நடைபெற்­றது. அரை­யி­று­தி­யில் சிங்­கப்­பூர் அணி கடந்த தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் தங்­கம் வென்ற தாய்­லாந்து அணியை 3-0 எனும் புள்­ளிக் கணக்­கில் ஓரங்­கட்­டி­யது.

அதற்கு முன்பு முதல் சுற்று ஆட்­டங்­களில் அது லாவோஸ், மலே­சியா, பிலிப்­பீன்ஸ் ஆகிய குழுக்­களை வீழ்த்­தி­யது.

இம்­முறை எப்­ப­டி­யும் தங்­கம் வென்­று­விட வேண்­டும் என்ற முனைப்­பு­டன் இறுதி ஆட்­டத்­தில் கள­மி­றங்­கிய சிங்­கப்­பூர் அணி இறுதி ஆட்­டத்­தின் அனைத்து சுற்­று­க­ளி­லும் வெற்றி பெற்று மலே­சிய அணி­யைத் திக்­கு­முக்­காட வைத்­தது.

சிங்­கப்­பூர் அணி­யில் அங்­கம் வகித்த ஐசேக் குவேக்­கிற்கு வெறும் 16 வயது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்த சிறு வய­தி­லும் இறுதி ஆட்­ட­மென்ற பதற்­றம் ஏது­மின்றி முனைப்­பு­டன் விளை­யாடி வெற்றி பெற்­றார் குவேக்.

இதற்­கி­டையே, மக­ளிர் பிரி­வில் சிங்­கப்­பூர் அணி வெண்­கலம் வென்­றது.

அரை­யி­று­தி­யில் தாய்­லாந்­தி­டம் 3-0 என சிங்­கப்­பூர் மக­ளிர் மேசைப்­பந்து அணி தோல்வி அடைந்­தது. மற்­றோர் அரை­யிறுதி­யில் தோற்ற வியட்­னா­முக்­கும் வெண்­க­லம் கிடைத்­தது.