தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெண்கலம் வென்ற சிங்கப்பூர் கிரிக்கெட் அணி

1 mins read

நோம்பென்: கம்­போ­டி­யா­வில் நடை­பெற்று வரும் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் சிங்­கப்­பூர் ஆண்­கள் கிரிக்­கெட் அணி வெண்­க­லம் வென்­றுள்­ளது.

நேற்று காலை நடை­பெற்ற ஆட்­டத்­தில் அது இந்­தோ­னீ­சி­யாவை எதிர்­கொண்­டது. முத­லில் பந்­த­டித்த சிங்­கப்­பூர் அணி 162 ஓட்­டங்­க­ளைக் குவித்­தது.

அடுத்து கள­மி­றங்­கிய இந்­தோ­னீ­சியா 147 ஓட்­டங்­கள் எடுத்து அனைத்து விக்­கெட்டு­க­ளை­யும் இழந்­தது. இதன் மூலம் 15 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் சிங்­கப்­பூர் அணி வாகை சூடி­யது.