தங்கம் நழுவியும் தளரா நம்பிக்கை

நோம்­பென்: நூலி­ழை­யில் தங்­கத்தை நழு­வ­விட்­ட­போ­தும் சிங்­கப்­பூ­ரின் ‘வூஷு’ தற்­காப்­புக் கலை­ஞர்­க­ளான ஜோவென் லிம்­மும் டே யு சுவா­னும் நடப்­புத் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டு­களில் ஏமாற்­றம் அளிக்­க­வில்லை.

ஆட­வர்க்­கான சாங்­கு­வான் பிரி­வில் 9.67 புள்­ளி­க­ளைப் பெற்ற லிம் தங்­கம் வெல்­வார் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், 14 பேர் பங்­கேற்ற அப்­போட்­டி­யில் கடை­சிப் போட்­டி­யா­ள­ருக்கு முன்­ன­தா­கக் களம் கண்ட இந்­தோ­னீ­சி­யா­வின் எட்­கர் சேவி­யர் மார்­வெலோ சற்று மேம்­பட்ட செயல்­பாட்டை வெளிப்­படுத்தி, 9.713 புள்­ளி­க­ளு­டன் தங்­கத்­தைத் தன்­வ­ய­மாக்­கிக்­கொண்­டார்.

கடந்த ஆண்டு ஹனோ­யில் நடந்த போட்­டி­யி­லும் 0.001 புள்­ளி­யில் தங்­கத்­தைப் பறி­கொ­டுத்த 24 வய­தான லிம், இம்­மு­றை­யும் தங்­கக் கனவு ஈடே­ற­வில்லை என்­ப­தால் மன­மு­டைந்து போக­வில்லை என்­றார்.

முன்­ன­தாக, நேற்று முன்­தி­னம் நடந்த டாவ்ஷு-கன்ஷு கலப்­புப் பிரி­வில் லிம் தங்­கப் பதக்­கத்­தைத் தட்­டிச் சென்­றார்.

“ஒட்­டு­மொத்­தத்­தில், என் செயல்­பாடு எனக்கு மகிழ்ச்­சியே. மூன்று சுற்­று­களில் எந்­தத் தவ­றும் செய்­யா­ம­லும் புள்ளி குறைக்­கப்­ப­டா­ம­லும் எனது செயல்­பாடு அமைந்­தது குறித்து பெரு­மை­கொள்­கி­றேன்,” என்­றார் லிம்.

இவ­ரைப் போலவே, இன்­னொரு சிங்­கப்­பூ­ர­ரான டேயும் ‘தைஜி­குவான் -தைஜி­ஜி­யான்’ பிரி­வில் மிகக் குறைந்த புள்ளி வித்­தி­யா­சத்­தில் தங்­கத்தை இழக்க நேர்ந்­தது. டே 19.119 புள்­ளி­க­ளு­டன் வெள்­ளிப் பதக்­கம் பெற, புரு­ணை­யின் ஹோசியா வோங் 19.189 புள்­ளி­க­ளு­டன் தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார்.

முதன்­மு­றை­யா­கத் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் பங்­கேற்ற 21 வய­தான டே காலை முழு­மை­யாக நீட்­டாதது போன்ற சிறு சிறு தவ­று­க­ளால் முத­லி­டத்­தைத் தவ­ற­விட்­டார்.

“இது மிக­வும் நல்ல கற்­றல் அனு­ப­வ­மாக இருந்­தது,” என்­றார் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழக மாண­வ­ரான டே.

ஒட்­டு­மொத்­தத்­தில், சிங்­கப்­பூ­ரின் ‘வூஷு’ குழு இம்­முறை இரண்டு தங்­கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என ஐந்து பதக்­கங்­களைக் கைப்­பற்­றி­யது. ஒப்­பு­நோக்க, கடந்த ஆண்டு நடந்த போட்­டி­களில் சிங்­கப்­பூர்க் குழு கூடு­த­லாக ஒரு வெள்­ளிப் பதக்­கம் வென்­றி­ருந்­தது.

போட்­டி­யி­டா­ம­லேயே தங்­கம்

இத­னி­டையே, எதி­ராளி இறு­திப் போட்­டி­யில் பங்­கேற்­காத­தால் போட்டி இல்­லா­ம­லேயே ‘தனி­ந­பர் ஃபாயில்’ பிரி­வில் தங்­கப் பதக்­கம் வென்­றார் சிங்­கப்­பூர் வாள்­வீச்சு வீராங்­கனை மேக்­சின் வோங்.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வோங் தங்கப் பதக்கம் வென்றது இதுவே முதன்முறை.

சென்ற ஆண்டு ஹனோ­யில் நடந்த போட்­டி­களில் தங்­கம் வென்­றி­ருந்த பிலிப்­பீன்­சின் சமந்தா கேட்­டன்­டன், சிங்­கப்­பூ­ரின் சியூங் கெமெய் உட­னான அரை­யி­று­திப் போட்­டி­யின்­போது இரு­முறை கீழே விழுந்­து­விட்­டார். வலி­யு­டன் விளை­யாடி அரை­யி­று­தி­யில் வெற்­றி­பெற்ற அவர், இறு­திப் போட்­டியை விட்­டுக்­கொ­டுப்­ப­தாக அறி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!