தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல்லில் அதிவேக அரைசதம்

2 mins read
4b65327d-f875-48ca-aeb9-fa8555b55f59
-

கோல்­கத்தா: இந்­திய பிரி­மி­யர் லீக் (ஐபி­எல்) டி20 கிரிக்­கெட் வர­லாற்­றில் ஆகக் குறை­வான பந்­து­களில் அரை­ச­தம் அடித்த ஆட்­டக்­கா­ரர் எனும் சாத­னை­யைப் படைத்­துள்­ளார் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்­வால் (படம்).

கோல்­கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்­கெ­தி­ராக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்­டத்­தில் 13 பந்­து­களில் அரை­ச­தத்தை எட்­டி­னார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான 21 வய­தான ஜெய்ஸ்­வால்.

2018ஆம் ஆண்டில் இந்தியாவின் கே.எல்.ராகுலும் 2022ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்சும் 14 பந்துகளில் அரைசதம் அடித்ததே முன்னைய சாதனை.

கோல்­கத்தா அணித்­த­லை­வர் நிதீஷ் ராணா வீசிய முதல் ஓவ­ரின் முத­லிரு பந்­து­க­ளை­யும் சிக்­ச­ருக்கு அனுப்­பி­னார் ஜெய்ஸ்­வால். அந்த ஓவ­ரில் 26 ஓட்­டங்­களை விளாசி யதன் மூலம் ஐபி­எல் போட்­டி­யின் முதல் ஓவ­ரில் ஆக அதிக ஓட்­டங்­களை எடுத்த ஆட்­டக்­கா­ரர் எனும் பெரு­மை­யை­யும் இவர் பெற்­றார்.

கோல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் இவர் 47 பந்துகளில் 98 ஓட்டங்களைக் குவித்து இறுதிவரை களத்திலிருந்தார்.

நடப்பு ஐபி­எல் இது­வரை 12 ஆட்­டங்­களில் விளை­யா­டி­யி­ருக்­கும் ஜெய்ஸ்­வால் ஒரு சதம், நான்கு அரை­ச­தங்­க­ளு­டன் 575 ஓட்­டங்­களைக் குவித்­துள்­ளார்.

முத­லில் பந்­த­டித்த கோல்­கத்தா அணி 20 ஓவர்­களில் எட்டு விக்­கெட் இழப்­பிற்கு 149 ஓட்­டங்­க­ளைச் சேர்த்­தது. 13.1 ஓவர்­களில் ஒரு விக்­கெட்டை மட்­டும் இழந்து அந்த இலக்கை எட்­டி­யது ராஜஸ்­தான் அணி. இதன்­மூ­லம் அவ்­வணி 3ஆம் இடத்­திற்கு முன்­னே­றி­யது (மும்பை இந்­தி­யன்ஸ் - குஜ­ராத் டைட்­டன்ஸ் அணி­க­ளுக்கு இடை­யி­லான நேற்­றைய ஆட்­டத்­திற்கு முந்­திய நில­வ­ரம்)

சகல் முதலிடம்

முன்­ன­தாக, அதே ஆட்­டத்­தில் நான்கு விக்­கெட்­டு­க­ளைச் சாய்த்­தார் ராஜஸ்­தான் அணி­யின் யுஸ்­வேந்­திர சகல். இத­னை­ய­டுத்து, 187 விக்­கெட்­டு­க­ளு­டன் ஐபி­எல் போட்­டி­களில் அதிக விக்­கெட் வீழ்த்­தி­யோர் பட்­டி­ய­லில் முத­லி­டத்­திற்கு அவர் முன்­னே­றி­னார்.