வாள்வீச்சில் தங்க வேட்டை

1 mins read
fac5f23d-d9db-4a28-a5fe-b676b9936983
-

நோம்­பென்: கம்­போ­டி­யா­வில் நடை­பெற்று வரும் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் சிங்­கப்­பூ­ருக்­கு அதன் வாள்­வீச்சு அணி மேலும் இரண்டு தங்­கப் பதக்­கங்­களை வென்றுள்ளது.

தங்­கப் பதக்­கத்தை வென்­ற­வர்­கள் இரு­வ­ரும் பதின்­ம­வ­ய­தி­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பெண்­கள் பிரி­வின் இறு­திச் சுற்­றில் வியட்­னா­மின் வு தி ஹோங்­கு­டன் மோதி­னார் சிங்­கப்­பூ­ரின் 15 வயது எல் கோ.

இறு­திச் சுற்றை 15-10 எனும் புள்­ளிக் கணக்­கில் கோ கைப்­பற்றி தங்­கம் வென்­றார்.

அரை­யி­று­திச் சுற்­றில் சிங்­கப்­பூ­ரின் மற்­றொரு வீராங்­க­னை­யான கிரியா திகா­னாவை கோ 12-11 எனும் புள்­ளிக் கணக்­கில் தோற்­க­டித்­தார்.

கிரியா வெண்­க­லப் பதக்­கத்தை வென்­றார்.

இவர் தோக்­கி­யோ­வில் நடை­பெற்ற ஒலிம்­பிக் போட்­டி­யில் போட்­டி­யிட்­ட­வர்.

ஆண்­க­ளுக்­கான வாள்­வீச்­சுப் போட்­டிக்­கான இறு­திச் சுற்­றில் பிலிப்­பீன்ஸ் ஆட்­டக்­கா­ரர் சேமு­வல் டிரான்­கு­யி­லா­னைச் சந்­தித்­தார் சிங்­கப்­பூ­ரின் 17 வயது சாமுவல் ராப்­சன்.

இந்த ஆட்­டத்­தில் சிங்­கப்­பூர் வீரர் ஆதிக்­கம் செலுத்­தி­னார். ஆட்­டம் 15-3 எனும் புள்­ளிக் கணக்­கில் அவ­ருக்­குச் சாத­க­மாக முடிந்­தது.

இது­வரை இவ்­வாண்­டின் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் சிங்­கப்­பூ­ரின் வாள்­வீச்சு அணி ஐந்து தங்­கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்­க­லம் வென்­றுள்ளது.