குஜராத்தை வீழ்த்திய மும்பை

குஜராத்தை வீழ்த்திய மும்பை

1 mins read

மும்பை: ஐபி­எல் கிரிக்­கெட் போட்­டி­யில் மும்பை இந்­தி­யன்ஸ் அணி­யும் நடப்பு வெற்­றி­யா­ள­ரான குஜ­ராத் டைட்­டன்­சும் நேற்று முன்­தி­னம் மோதி­யது.

குஜ­ராத் முத­லில் பந்­து­வீசி­யது. அதன்­படி மும்பை அணி முத­லில் பந்­த­டித்­தது.

அணித் தலை­வர் ரோகித் சர்மா 18 பந்­து­களில் 29 ஓட்­டங்­கள் எடுத்து ஆட்­ட­மி­ழந்­தார். சூர்­ய­கு­மார் யாதவ் சிறப்­பாக விளை­யாடி 20வது ஓவ­ரின் கடைசி பந்­தில் சதம் அடித்­தார். இவர் 49 பந்­து­களில் 103 ஓட்­டங்­கள் எடுத்­தார்.

மும்பை அணி 5 விக்­கெட்டு­கள் இழப்­புக்கு 218 ஓட்­டங்­கள் எடுத்­தது. குஜராத் 191 ஓட்டங்களை மட்­டுமே எடுத்­தது. இதன்­மூ­லம் 27 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் மும்பை வென்­றது.