சாதித்த சாந்தி பெரேராவின் அடுத்த இலக்கு

சாதித்த சாந்தி பெரேராவின் அடுத்த இலக்கு

1 mins read
ede141f2-5878-4659-9db2-8559d7cd58e4
-

சிங்­கப்­பூர்: தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் கடந்த வாரம் சிங்­கப்­பூர் ஓட்­டப் பந்­தய வீராங்­கனை சாந்தி பெரே­ரா­வுக்­குப் பொன்­னான வாரம் என்றே சொல்­ல­லாம்.

திங்­கள்­கி­ழமை 200 மீட்­டர் ஓட்­டத்­தி­லும் வெள்­ளிக்­கி­ழமை 100 மீட்­டர் ஓட்­டத்­தி­லும் வென்று இரண்டு தங்­கப்­ப­தக்­கங்­க­ளு­டன் சிங்­கப்­பூ­ருக்­குப் பெருமை சேர்த்­தார் அவர். மேலும், 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற அவரது கனவும் பலித்தது.

சனிக்­கி­ழமை சிங்­கப்­பூர் திரும்­பிய அவர் ஓய்­வில் இருக்­கி­றார். ஒரு வார ஓய்­வுக்­குப் பின்­னர் ஜெர்­ம­னிக்­கும் சுவிட்­சர்­லாந்­துக்­கும் பய­ணம் செல்லவிருப்பதாக அவர் கூறினார்.

ஆசிய விளை­யாட்­டு­களில் பதக்­கம் பெறு­வ­தும் அடுத்த ஆண்டு நடை­பெ­றும் பாரிஸ் ஒலிம்­பிக்­கிற்­குத் தகு­தி­பெ­று­வ­தும் தமது அடுத்த இலக்­கு­கள் என்று நேற்று 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தி­யா­ள­ரி­டம் திரு­வாட்டி சாந்தி கூறி­னார்.

ஆசிய விளையாட்டுகள் 23 செப்டம்பர் தொடங்கி 8 அக்டோபர் வரை சீனாவின் ஹாங்ஸு நகரில் நடைபெற உள்ளது.