நீர்ப்பந்தில் மேலும் ஒரு வெற்றி: 2019ல் இழந்த தங்கம் இன்று கிடைக்கும்

1 mins read

நோம்­பென்: தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் நேற்று சிங்­கப்­பூ­ரின் ஆண்கள் நீர்ப்­பந்து அணி பிலிப்­பீன்சை 10-4 என்­னும் கோல் எண்­ணிக்­கை­யில் வீழ்த்­தி­யது.

நோம்­பென் தேசிய ஒலிம்­பிக் நீச்­சல் மையத்­தில் நடை­பெற்ற போட்­டி­யில் வென்­ற­தன் மூலம் சிங்­கப்­பூ­ரின் தங்­கக் கனவு நன­வா­வது நெருங்கி வரு­கிறது. கம்­போ­டி­யா­வுக்கு எதி­ரான இன்­றைய ஆட்­டம் தங்­கப்­ப­தக்­கத்தை நிர்­ண­யிக்­கும்.

சிங்­கப்­பூர் வெற்­றி­யின் விளிம்­பில் நிற்­கிறது. இன்­றைய ஆட்­டம் சம­நி­லை­யில் முடிந்­தால்­கூட சிங்­கப்­பூர் தங்­கத்தை வென்­று­வி­டும். அதற்­கான வாய்ப்­பு­கள் பிர­கா­ச­மாக உள்­ளன. கார­ணம், கம்­போ­டியா விளை­யா­டிய நான்கு போட்­டிக­ளி­லும் தோல்­வி­யைச் சந்­தித்­துள்­ளது.

எனவே, இன்று சிங்­கப்­பூரை வெல்­வதோ ஆட்­டத்தை சமப்­ப­டுத்­து­வதோ கம்­போ­டி­யா­வுக்கு மிகக் கடி­ன­மா­ன­தாக இருக்­கும். சிங்­கப்­பூர் இது­வரை விளை­யா­டிய நான்கு போட்­டி­க­ளி­லும் வென்று 12 புள்­ளி­க­ளு­டன் பட்­டி­ய­லின் முதல் இடத்­தில் உள்­ளது.

தென்­கி­ழக்­கா­சிய ஆண்கள் நீர்ப்­பந்­தின் 54 ஆண்­டு­கால வர­லாற்­றில் 2019ஆம் ஆண்டு மட்­டுமே அதிர்ச்சி அளிக்­கும் வகை­யில் தங்­கத்தை சிங்­கப்­பூர் இழந்­தது. அந்­தப் போட்­டி­யில் வென்ற இந்­தோ­னீ­சி­யாவை நேற்று முன்­தி­னம் சிங்­கப்­பூர் வென்று பழி­தீர்த்­துக்­கொண்­டது.