3 வீரர்களை முன்னேற்றும் முயற்சியில் சென்னைக்கு தோல்வி

3 வீரர்களை முன்னேற்றும் முயற்சியில் சென்னைக்கு தோல்வி

2 mins read
346f7382-0241-47da-af9b-afe2daf3ef2e
-

சென்னை: சென்னை சேப்­பாக்­கம் திட­லில் ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற ஐபி­எல் போட்­டி­யில் கோல்­கத்தா நைட் ரைடர்ஸ் அணி­யி­டம் சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி 6 விக்­கெட்டு வித்­தி­யா­சத்­தில் தோல்­வி­யைத் தழுவி­யது.

இந்­தத் தோல்­விக்கு, மூன்று வீரர்­களை முன்­னேற்ற அணித் தலை­வர் டோனி எடுத்த முயற்­சி­யும் ஒரு கார­ணம் என்ற விமர்­ச­னம் எழுந்து உள்­ளது.

போட்டி முடிந்­த­துமே பேசிய டோனி, பூவா தலை­யா­வில் தவ­றான முடிவு எடுக்­கப்­பட்­டது தோல்­விக்கு முக்­கிய கார­ணம் என்று கூறி­யி­ருந்­தார்.

பனிப்­பொ­ழிவு இருக்­காது என்ற நினைப்­பில் பந்­த­டிப்­பைத் தேர்வு செய்­த­தா­க­வும் ஆனால் இரண்­டாம் பாதி­யில் அதி­கப் பனிப்­பொ­ழிவு ஏற்­பட்டு தமது அணி­யின் பந்­து­வீச்­சுக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­ய­தா­க­வும் அவர் கூறி­னார்.

இதற்கு முன்­னர் டெல்லி கேப்­பிட்­டல்ஸ் அணிக்கு எதி­ராக பூவா தலை­யா­வில் வென்ற டோனி பந்­த­டிப்­பைத் தேர்வு செய்து ஆட்­டத்­தி­லும் வென்­றார்.

ஆயி­னும், இதெல்­லாம் முக்­கிய கார­ண­மில்லை என்று விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர். சென்னை அணி­யின் தலை­சி­றந்த பந்­த­டிப்­பா­ளர்­க­ளான ருது­ராஜ், டேவோன் கான்வே, ரஹானே மற்­றும் சிவம் துபே நல்ல ஃபார்மில் உள்­ள­னர். அவர்­க­ளைப் பற்­றிக் கவலை இல்லை. ஆனால், நடு­வில் ஆடக்­கூ­டிய ராயுடு, ஜடேஜா மற்­றும் மொயின் அலி ஃபார்மில் இல்­லா­த­தால் தொடர்ந்து சொதப்பி வரு­கி­றார்­கள்.

குறிப்­பாக, ராயுடு 10 போட்­டி­களில் 122 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்­துத் தடு­மாறி வரு­கி­றார். அதே­போல ஜடே­ஜா­வின் மோச­மான பந்­த­டிப்பு கடும் விமர்­ச­னத்­துக்கு ஆளாகி வரு­கிறது.

விமர்­ச­னங்­க­ளைப் பொருட்­ப­டுத்­தாத டோனி, இந்த மூவ­ரை­யும் ஃபார்முக்­குக் கொண்டு வரும் நோக்­கி­லேயே முத­லில் பந்­த­டிப்­பைத் தேர்வு செய்­த­தாக சில ஊட­கத் தக­வல்­கள் குறிப்­பி­டு­கின்­றன.

ஆனால், பிளே ஆஃப் சுற்­றுக்கு முன்­னேற டெல்லி அணியை வென்­றாக வேண்­டிய கட்­டா­யத்­தில் உள்­ள­தால் டோனி இந்த சோதனை முயற்­சி­யைக் கைவிட வேண்­டும் என்று சமூக ஊட­கங்­களில் குரல் எழுப்­பப்­பட்டு வரு­கிறது.

கார­ணம், கோல்­கத்தா அணிக்கு எதி­ரான ஆட்­டத்­தி­லும் இந்த மூவ­ரும் மோச­மாக விளை­யாடி டோனியை ஏமாற்­றி­விட்­ட­னர்.