தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தங்கமகன் திமத்தி லோ

2 mins read
c0b435d1-4d52-4c0f-a50e-6e804380b6c8
-

நோம்­பென்: தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­க­ளின் மல்­யுத்­தப் போட்­டி­யில் முதல்­மு­றை­யாக சிங்­கப்­பூர் தங்­கம் வென்­றி­ருக்­கிறது. சிங்­கப்­பூ­ருக்­குப் பெருமை தேடித் தந்­த­வர் திமத்தி லோ.

ஆண்­கள் 125 கிலோ­கி­ராம் எதேச்­சை­பாணி மல்­யுத்­தப் பிரி­வில் இவர் 0வாகை சூடி­னார்.

2013, 2015ஆம் ஆண்டு விளை­யாட்­டு­க­ளின் ஜூடோ போட்­டி­யில் வெண்­க­லம் வென்ற லோ, 2019 விளை­யாட்­டு­களில் சாம்போ போட்­டிக்கு மாறி அதி­லும் வெண்­க­லம் வென்­றார். அதற்­குப் பிறகு சென்ற தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் மல்­யுத்­தத்­திற்கு மாறி­னார், மீண்­டும் வெண்­க­லம்­தான் கிட்­டி­யது.

விட்­டுக்­கொ­டுக்­கா­மல் போராடி ஒரு­வ­ழி­யாக தங்­கத்தை வென்­ற­தோடு சிங்­கப்­பூ­ருக்கு வர­லாறு படைத்­தி­ருக்­கி­றார் 31 வயது லோ.

உணவு வர்த்­த­க­ரான இவ­ருக்­குக் காலை 5.30 மணிக்­கெல்­லாம் பணி­கள் தொடங்­கி­வி­டும். உண­வுப் பொருள்­க­ளைத் தயார் செய்­வ­தற்­கும் சமைப்­ப­தற்­கும் ஒவ்­வொரு நாளும் கிட்­டத்­தட்ட 10 மணி­நே­ரம் செல­வி­டும் லோ ஓய்­வெ­டுப்­ப­தைப் பற்றி சிந்­திக்­கா­த­வர். விளை­யாட்­டுப் போட்­டி­க­ளி­லும் இவர் அதே மனப்­போக்­கைப் பின்­பற்­று­கி­றார்.

ஆண்­கள் ஹாக்­கி­யில் வெள்­ளிப் பதக்­கம் வென்­றது சிங்­கப்­பூர். இறு­தி­யாட்­டத்­தில் சிங்­கப்­பூரை 3-0 எனும் கோல் கணக்­கில் வென்று தங்­கத்­தைத் தட்­டிச் சென்­றது மலே­சியா.

"ஆட்­டம் முழு­வ­தும் (சிங்கப்பூர்) அணி சிறப்­பாக விளை­யா­டி­யது. என்­னைப் பொறுத்­த­வரை போட்டி முழு­வதும் அணி மிகச் சிறப்­பாக ஆடி­யது. திட்­ட­மிட்­ட­படி நாங்­கள் இறுதியாட்டத்தை அணு­கி­னோம். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக வெற்­றி­காணவோ சம­நிலை காணவோ எங்­க­ளால் முடி­ய­வில்லை," என்­றார் சிங்­கப்­பூர் ஹாக்கி வீரர் ஜெரி­மயா சேம்­சன்.

தென்­கி­ழக்காசிய விளை­யாட்டு­க­ளின் ஆண்­கள் நீர்ப்­பந்­தில் இழந்த பெயரை மீட்­டுக்­கொண்டது சிங்­கப்­பூர். இறு­தி­யாட்­டத்­தில் 22-14 எனும் கோல் கணக்­கில் கம்­போ­டி­யாவை வென்று சிங்­கப்­பூர் தங்­கத்­தைக் கைப்­பற்­றி­யது. போட்­டி­யில் தான் விளை­யா­டிய ஐந்து ஆட்­டங்­க­ளி­லும் வென்­றது அணி.

2019ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளை­யாட்டு­களில் கோட்­டை­விட்ட சிங்­கப்­பூர் ஆண்கள் நீர்ப்பந்து அணி மறுபடியும் வட்டார அளவில் அச்­சு­றுத்­தும் அணி­யாக உரு­வெ­டுத்­துள்­ளது.

ஆண்­கள் காற்­பந்­தில் மியன்­மாரை 3-1 எனும் கோல் கணக்­கில் வென்று வெண்­க­லப் பதக்­கத்தை வென்­றது வியட்­னாம்.

தென்கிழக்காசிய விளையாட்டுகள்: முதல்முறையாக மல்யுத்தத்தில் சிங்கப்பூருக்குத் தங்கம்