லிவர்பூலுக்கு வெற்றிமேல் வெற்றி, லெஸ்டருக்கு அடிமேல் அடி

லிவர்பூலுக்கு வெற்றிமேல் வெற்றி, லெஸ்டருக்கு அடிமேல் அடி

1 mins read
e31eceb0-7926-4f2d-beaa-8464c7f8db2e
-

லெஸ்­டர்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­தில் லெஸ்­டர் சிட்­டி­யைப் பிரச்­சி­னை­யின் ஆழத்­துக்­குத் தள்ளி­விட்டது லிவர்­பூல். கடந்த சில ஆட்­டங்­க­ளாக வெற்றி­க­ளைக் குவித்து வரு­கிறது லிவர்­பூல். அதே­வே­ளை­யில், பிரி­மி­யர் லீக்­கிற்கு அடுத்த நிலை­யில் இருக்­கும் சாம்­பி­யன்­ஷிப் பட்­டி­ய­லுக்கு தள்­ளப்­படும் அபா­யத்­தில் உள்­ளது லெஸ்­டர்.

ஏழே ஆண்­டு­க­ளுக்கு முன்­பு­தான் லெஸ்­டர் பிரிமியர் லீக் கிண்­ணத்தை வென்­றி­ருந்­தது.

பிரி­மி­யர் லீக் பட்­டி­ய­லின் கடைசி மூன்று இடங்­களில் முடிக்­கும் குழுக்­கள் சாம்­பி­யன்­ஷிப்­பிற்­குத் தள்­ளப்­படும். இரண்டே ஆட்­டங்­கள் எஞ்­சி­யுள்ள நிலை­யில் லீக் பட்­டி­ய­லில் 19வது இடத்­தில் உள்­ளது லெஸ்­டர்.