தர்மசாலா: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்கடித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற 66வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. பூவா தலையாவில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசியது.
பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் முதல் ஓவரிலேயே இரண்டு ஓட்டங்களிலும் அதர்வா 19 ஓட்டங்களிலும் தவான் 17 ஓட்டங்களிலும் லிவிங்ஸ்டன் 9 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். சாம் கரண் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஜோடி சேர்ந்து பஞ்சாப் அணியை சரிவிலிருந்து மீட்டது. இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜித்தேஷ் 44 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து, ராஜஸ்தான் பந்தடித்தது. ஜாஸ் பட்லர் ஓட்டம் ஏதுமின்றி நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கலுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து ஓட்டங்களைக் குவித்தனர்.
இறுதியில், ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.