ஐபிஎல்: பிளேஆஃப் சுற்றில் சென்னை, லக்னோ

ஐபிஎல்: பிளேஆஃப் சுற்றில் சென்னை, லக்னோ

1 mins read
92aa44ff-1fb6-485e-87eb-9db9eeeb1e07
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னையின் மகேந்திர சிங் தோனி (வலது). படம்: ஏஎஃப்பி -

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட்டின் பிளேஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய குழுக்கள் தகுதிபெற்றுள்ளன.

டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான ஆட்டத்தில் 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகண்டது சென்னை.

அதைத் தொடர்ந்து ஐபிஎல் பட்டியலில் சென்னை இரண்டாம் இடத்தில் முடிப்பது உறுதியானது.

முதலில் பந்தடித்த சென்னை மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ஓட்டங்களைக் குவித்தது.

அதற்குப் பிறகு டெல்லி ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

கோல்கத்தா நைட் ரைடர்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வென்றது லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ்.

முதலில் பந்தடித்த லக்னோ எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்களை எடுத்தது.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நூலிழையில் எட்டத் தவறியது கோல்கத்தா.

ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு கோல்கத்தா 175 ஓட்டங்களை எடுத்தது.

பட்டியலில் லக்னோ மூன்றாவது இடத்தைப் பிடிப்பது உறுதியானது.