ஐபிஎல்: பிளேஆஃபை நெருங்கும் மும்பை

ஐபிஎல்: பிளேஆஃபை நெருங்கும் மும்பை

1 mins read
9055dfc6-e0ac-4e16-8cd0-7c04b0008364
சதமடித்ததைக் கொண்டாடும் மும்பையின் கேமரன் கிரீன். படம்: ஏஎஃப்பி -

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது மும்பை இந்தியன்ஸ்.

அக்குழு எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை வென்றுள்ளது.

முதலில் பந்தடித்த ஐதராபாத் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ஓட்டங்களை எடுத்தது.

அதற்குப் பிறகு 18 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை எடுத்து இலக்கை எட்டியது மும்பை.

47 பந்துகளில் 100 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார் மும்பையின் கேமரன் கிரீன்.