தாய்லாந்து காற்பந்து வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரிகளுக்குத் தடை

பேங்காக்: இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்ற தாய்லாந்து காற்பந்து அணியின் இரண்டு விளையாட்டாளர்கள், ஒரு பயிற்றுவிப்பாளர், இரண்டு அதிகாரிகள் ஆகியோருக்கு நீண்டகாலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்காசிய விளையாட்டுகளின் ஆண்கள் காற்பந்துப் போட்டி இறுதியாட்டத்தில் தாய்லாந்தும் இந்தோனீசியாவும் மோதின.

அந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையே இரண்டு முறை மோதல் ஏற்பட்டது.

இரண்டு அணிகளையும் சேர்ந்த விளையாட்டாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் சண்டையிட்டனர்.

அதைத் தொடர்ந்து தாய்லாந்து காற்பந்துச் சங்கம் தடை விதித்திருக்கிறது.

மே மாதம் 16ஆம் தேதியன்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் தாய்லாந்தின் மூன்று விளையாட்டாளர்கள் சிவப்பு அட்டை காண்பித்து நீக்கப்பட்டனர்.

கூடுதல் நேரத்தில் 5-2 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டு தங்கப் பதக்கத்தை வென்றது இந்தோனீசியா.

 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!