20 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் நியூகாசல்

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் நியூகாசல்

1 mins read
c08d73b6-6c0a-4960-9ab0-c44f11bf0265
நியூகாசல் வீரர் மிகெல் அல்மிரானுடன் அவரின் மகன். படம்: ஏஎஃப்பி -

நியூகாசல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான நியூகாசல் யுனைடெட் 20 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

பிரிமியர் லீக்கில் லெஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் நியூகாசல் கோலின்றி சமநிலை கண்டது.

அதைத் தொடர்ந்து லீக் பட்டியலில் நியூகாசல் முதல் நான்கு இடங்களுக்குள் வருவது உறுதியானது.

பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வரும் குழுக்கள் அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக்கில் போட்டியிடும்.

புதிய உரிமையாளர்களின் தலைமையில் மேன்மேலும் உயர்ந்து வந்துள்ளது நியூகாசல்.

நிர்வாகி எடி ஹாவும் குழுவை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.