ஐபிஎல் இறுதியாட்டத்தில் குஜராத்

ஐபிஎல் இறுதியாட்டத்தில் குஜராத்

1 mins read
5b1d8cb7-9459-4e60-a893-f466ea391ceb
சதமடித்த மகிழ்ச்சியில் ஷுப்மன் கில். படம்: ஏஎஃப்பி -

அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் லீக்கின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குஜராத் டைட்டன்ஸ்.

மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகண்டு இறுதியாட்டத்திற்குச் சென்றது குஜராத்.

முதிலில் பந்தடித்த குஜராத் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ஓட்டங்களைக் குவித்தது.

60 பந்துகளில் 129 ஓட்டங்களை விளாசினார் குஜராத்தின் ஷுப்மன் கில்.

பிறகு பந்தடித்த மும்பை, 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலக்கை எட்டத் தவறியது.

171 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது மும்பை.

ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ள இறுதியாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சைச் சந்திக்கும் குஜராத் டைட்டன்ஸ்.