தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை-குஜராத் மோதல்

2 mins read
b68e4743-0d94-499f-be24-dcd57018bd14
-
multi-img1 of 2

அக­ம­தா­பாத்: ஐபி­எல் கிரிக்­கெட் போட்­டி­யின் இறுதி ஆட்­டம் சிங்­கப்­பூர் நேரப்­படி இன்று இரவு 10 மணிக்கு நடை­பெ­று­கிறது.

கிண்­ணம் ஏந்தும் குழுவை நிர்­ண­யிக்­கும் இந்த ஆட்­டம் குஜ­ராத்­தின் நரேந்­திர மோடி விளை­யாட்­ட­ரங்­கத்­தில் நடை­பெ­று­கிறது. இறுதி ஆட்­டத்­தில் நான்கு முறை வெற்­றி­யா­ள­ரான சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி­யும் நடப்பு வெற்­றி­யா­ள­ரான குஜ­ராத் டைட்­டன்ஸ் அணி­யும் மோது­கின்­றன.

இம்­மா­தம் 23ஆம் தேதி­யன்று 'பிளே ஆஃப்' சுற்­றில் குஜ­ராத் டைட்­டன்ஸ் அணியை 15 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் வீழ்த்திய சென்னை அணி இறுதி ஆட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது.

இதை­ய­டுத்து, நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் குஜ­ராத் அணி தோற்கடித்து இறுதி ஆட்­டத்­தில் இடம்­பி­டித்­தது.

இன்­றைய இறுதி ஆட்­டம் அக­ம­தா­பாத்­தில் நடை­பெ­று­வதால் சொந்த மண்­ணில் கள­மி­றங்­கும் சாத­க­நிலை குஜ­ராத் அணிக்கு நிச்­ச­யம் இருக்­கும்.

இன்று குஜ­ராத் வாகை சூடி­னால் போட்­டி­யில் அறி­மு­க­மா­கி­யதை அடுத்து, தொடர்ந்து இரண்டு முறை கிண்­ணம் ஏந்­திய முதல் அணி எனும் பெருமை அதைச் சேரும். இந்­நி­லை­யில், இந்த ஐபி­எல் தொட­ரில் சிறப்­பாக விளை­யா­டி­ய­தா­கத் தமக்குத் தெரிந்த ஆகச் சிறந்த ஐந்து பந்­த­டிப்­பா­ளர்­களை இந்­தி­யா­வின் முன்­னாள் நட்சத்திர வீரர் சேவாக் ­தேர்வு செய்துள்ளார்.

"நான் அதி­கப்­ப­டி­யான தொடக்க ஆட்­டக்­கா­ரர்­களைத் தேர்வு செய்­ய­வில்லை. ஏனெ­னில் அவர்­க­ளுக்கு நிறைய வாய்ப்­பு­கள் கிடைக்கின்றன," என்று சேவாக் தெரிவித்தார்.

ரிங்கு சிங், சிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஹென்ரிச் கிளாசென் ஆகியோரை அவர் தேர்வு செய்தார்.