18, 19வது இடங்களைத் தவிர்க்க கடும் போராட்டம்

18, 19வது இடங்களைத் தவிர்க்க கடும் போராட்டம்

1 mins read

லண்­டன்: இப்­ப­ரு­வத்­துக்­கான இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் கா்றபந்­துப் போட்டி இன்றுடன் முடி­வுக்கு வர இருக்­கிறது.

கடைசி மூன்று இடங்­களில் போட்­டியை முடித்­துக்­கொள்­ளும் குழுக்­கள் அடுத்த பரு­வத்­தில் இரண்­டாம் நிலை லீக் போட்­டிக்­குத் தள்­ளப்­படும்.

இந்­நி­லை­யில், லீக் பட்­டி­ய­லில் 18, 19வது இடங்­க­ளைத் தவிர்க்க எவர்ட்­டன், லெஸ்­டர் சிட்டி, லீட்ஸ் ஆகிய குழுக்­களி­டையே மிகக் கடு­மை­யான போட்டி நில­வு­கிறது.

லீக் பட்­டி­ய­லில் 24 புள்­ளி­களு­டன் சவுத்­ஹேம்­டன் குழு கடைசி இடத்­தில் உள்­ளது.

அது ஏற்­கெ­னவே இரண்­டாம் நிலை லீக்­கிற்­குத் தள்­ளப்­பட்­டு­விட்­டது.

அடுத்த பரு­வத்­தில் அது பிரி­மி­யர் லீக் போட்­டி­யில் இடம்­பெ­றாது.

இந்த நிலை­யைத் தவிர்க்க சிங்­கப்­பூர் நேரப்­படி இன்­றி­ரவு 11.30 மணிக்கு ஸ்பர்ஸ் குழு­வு­டன் மோது­கிறது லீட்ஸ் யுனை­டெட். மற்­றோர் ஆட்­டத்­தில் லெஸ்­டர் சிட்­டி­யும் வெஸ்ட் ஹேம் குழு­வும் சந்­திக்­கின்­றன.

கடந்த பல ஆண்­டு­க­ளாக பிரி­மி­யர் லீக்­கில் விளை­யாடி வரும் எவர்ட்­டன், தொடர்ந்து அதன் பிரி­மி­யர் லீக் அந்­தஸ்­தைத் தக்­க­வைத்­துக்­கொள்ள இன்று போர்ன்மத்தைத் தோற்கடித்தே ஆக வேண்டும்.

யார் பிழைக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.