இந்திய அணி செய்தது தவறு: கங்குலி

லண்­டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்­பி­யன்­ஷிப் இறு­திப்­போட்டி லண்­ட­னில் நடை­பெற்று வரு­கிறது. வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற 3வது நாள் ஆட்­டத்­தில் இந்­திய அணியை 296 ஓட்­டங்­க­ளுக்­குள் ஆட்­ட­மி­ழக்­கச் செய்­தது ஆஸ்­தி­ரே­லியா.

முன்­ன­தாக, ஆஸ்­தி­ரே­லிய அணி முதல் இன்­னிங்­ஸில் 469 ஓட்­டங்­க­ளைக் குவித்து 173 ஓட்­டங்­கள் முன்­னிலை பெற்­றி­ருந்­தது. 3வது நாள் ஆட்ட முடி­வில் 296 ஓட்­டங்­கள் முன்­னிலை பெற்­ற ஆஸ்திரேலியா நேற்று தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் கையே ஓங்கி இருப்­ப­தால் அதற்­கான வெற்றி வாய்ப்­புப் பிர­கா­ச­மாக இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, இந்­திய வீரர் ஷர்­துல் தாக்­குர் அரை­ச­தம் அடித்­த­தன் மூலம் புதிய சாத­னையை நிகழ்த்­தி­யுள்­ளார். ஓவல் மைதா­னத்­தில் வெளி­நாட்டு வீரர் தொடர்ச்­சி­யாக 3 முறை அரை­ச­தம் அடித்­துள்ள பட்­டி­ய­லில் இணைந்­ததே அவ­ரது சாதனை. ரஹா­னே­வு­டன் இணை சேர்ந்த ஷர்­துல் தாக்­குர் இந்­தி­யாவை ‘ஃபாலோ ஆன்’ ஆவ­தி­லி­ருந்து காப்­பாற்­றி­னார். சிறப்­பாக விளை­யா­டிய இரு­வ­ரும் அரை­ச­தம் கடந்­த­னர்.

இந்­நி­லை­யில், இந்­திய அணித் தலை­வர் ரோகித் சர்­மாவை முன்­னாள் அணித் தலை­வர் சவு­ரவ் கங்­குலி விமர்சித்­துள்­ளார். அஸ்­வின் போன்ற வெற்­றி­யா­ளரை இடம்­பெ­றச் செய்­யா­மல் இந்­திய அணி தவறு செய்­து­விட்­ட­தாக அவர் சாடி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!