தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசியலில் நுழையும் அம்பதி ராயுடு

1 mins read

விசா­கப்­பட்­டி­னம்: ஆந்­திர மாநில சட்­ட­மன்­றத் தேர்­தலும் மக்­க­ள­வைத் தேர்­த­லும் அடுத்த ஆண்டு நடை­பெற உள்­ளன. அத­னால், அர­சி­யல் கட்­சி­கள் பிர­ப­லங்­களை வளைத்­துப் போடு­வ­தில் தீவி­ரம் காட்­டு­கின்­றன.

அந்த வகை­யில் அண்­மை­யில் ஓய்வை அறி­வித்த கிரிக்­கெட் வீரர் அம்­பதி ராயு­டு­வுக்கு காங்­கி­ரஸ், பாஜக அழைப்பு விடுத்­துள்­ளன. ஆனால், அம்­பதி ராயுடு ஒய்­எஸ்­ஆர் காங்­கி­ர­சால் ஈர்க்­கப்­ப­டு­வ­து­போ­லத் தெரி­கிறது. சென்னை சூப்­பங் கிங்ஸ் அணி­யில் இடம்­பெற்­றி­ருந்த அவர், அந்த அணி 5வது முறை ஐபி­எல் கிண்­ணத்தை வெல்­வ­தற்கு முக்­கிய பங்­காற்­றி­னார்.

ஆந்­திர முதல்­வர் ஜெகன் மோகன் ரெட்­டி­யைச் சந்­தித்த அம்­பதி ராயுடு (படம்) ஐபி­எல் கிண்­ணத்தை அவ­ரி­டம் காண்­பித்து வாழ்த்­துப் பெற்­றார். இச்­செய்தி வெளி­யா­ன­தும் அம்­பதி ராயுடு ஒய்­எஸ்­ஆர் காங்­கி­ர­சில் இணை­வார் என்று பலரும் பேசத் தொடங்­கி­விட்­ட­னர்.

அதற்கு முக்­கிய கார­ணம் அவ­ரது உற­வி­னர் அம்­பதி ராம்­பாபு, ஜெகன் மோகன் அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்றிருப்பது.

இருப்­பி­னும், தமது அர­சி­யல் பிர­வேச முடிவை அம்­பதி ராயுடு இன்­ன­மும் வெளி யிடவில்லை.