'தவறான நடத்தை'க்காகப் பதவி விலகிய 2024 ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான பாதுகாப்புத் தலைவர்

'தவறான நடத்தை'க்காகப் பதவி விலகிய 2024 ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான பாதுகாப்புத் தலைவர்

1 mins read
03d63605-4326-486d-9380-cae73f6ed231
அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகள் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான பாதுகாப்புத் தலைவர் ஸியாட் கூரி பதவி விலகிக்கொண்டுள்ளார்.

ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதன் காரணமாக அவர் பதவி விலகிக்கொண்டார் என்று அதிகாரிகள் கூறினர்.

53 வயது கூரி 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்துத் தலைநகர் லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது அவர் ஒரு பெண்ணிடம் தவறான முறையில் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

அதைத் தொடர்ந்து திரு கூரிமீது புகார் கொடுக்கப்பட்டிருந்தது.