தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லெஸ்டர் சிட்டியின் புதிய நிர்வாகி என்ஸோ மரேஸ்கா

1 mins read
8bb967e0-9fcf-449d-aa8d-52dbb8c6eee6
-

லண்­டன்: பிரி­மி­யர் லீக்­கி­லி­ருந்து இறக்­கப்­பட்ட லெஸ்­டர் சிட்டி காற்­பந்­துக் குழு தனது புதிய நிர்­வா­கி­யாக மான்­செஸ்­டர் சிட்­டி­யின் முன்­னாள் துணை பயிற்­று­விப்­பா­ள­ரான என்ஸோ மரேஸ்­காவை (படம்) நிய­மித்­துள்­ளது.

அடுத்த காற்­பந்­துப் பரு­வத்­தில் சாம்­பி­யன்­ஷிப் லீக்­கில் சிறப்­பாக விளை­யாடி மீண்­டும் பிரி­மி­யர் லீக்­கில் இடம்­பி­டிக்க அக்­குழு இப்­போதே முயற்சி எடுக்க தொடங்­கி­விட்­டது.

43 வயது இத்­தா­லி­ய­ரான மரேஸ்­கா­வின் ஒப்­பந்­தம் 2026 வரை நீடிக்­கிறது. அவர் தற்­போ­தைய நிர்­வாகி டீன் ஸ்மித்­துக்­குப் பதி­லாக வரு­கி­றார்.

"இக்­கு­ழுவை உயர்ந்­த­நி­லைக்­குக் கொண்டு செல்ல ஆவ­லாக இருக்­கி­றேன்," என்­றார் மரேஸ்கா.

"நாங்­கள் எதிர்­பார்க்­கும் திற­மை­க­ளைக் கொண்­டுள்­ளார் மரேஸ்கா," என்­றார் லெஸ்­டர் சிட்டி காற்­பந்­துச் சங்­கத்­தின் உரி­மை­யா­ளர் அய்­யா­வாத் ஸ்ரீவ­த­ன­பி­ரபா.