விளையாட்டுத் துளிகள்

ரெட்புல் குழுவிற்கு 100வது வெற்றி

மோன்ட்ரியல்: கனடாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் நடப்பு உலக வெற்றியாளரான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் வாகை சூடினார்.

இது வெர்ஸ்டாப்பனுக்குக் கிடைத்த 41வது வெற்றி. இதன்மூலம் அயர்ட்டன் சென்னாவின் சாதனையை அவர் சமன்செய்தார்.

அத்துடன், வெர்ஸ்டாப்பன் பிரதிநிதிக்கும் ரெட்புல் குழுவிற்குக் கிட்டிய 100வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

கனடிய கிராண்ட் பிரீயில் ஆஸ்டன் மார்ட்டின் குழுவின் ஃபெர்னாண்டோ அலோனோ இரண்டாமிடத்தையும் மெர்சிடிஸ் குழுவின் லூவிஸ் ஹேமில்டன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

கிண்ணம் வென்றது ஸ்பெயின்

ரோட்டர்டாம்: பெனால்டி வாய்ப்புகளில் 5-4 என்ற கோல் கணக்கில் குரோவேஷியாவை வீழ்த்தி, நேஷன்ஸ் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றியது ஸ்பெயின் காற்பந்துக் குழு.

கூடுதல் நேரம் வரை சென்ற இறுதிப் போட்டியில் இருதரப்பாலும் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை.

பெனால்டி வாய்ப்புகளில் ஆட்டநாயகனாக உருவெடுத்தார் ஸ்பானிய கோல்காப்பாளர் உனாய் சிமோன்.

குரோவேஷிய வீரர் லோவ்ரோ மேயரும் புருணோ பெட்கோவிச்சும் பெனால்டி வாய்ப்பு மூலம் உதைத்த பந்துகளை அற்புதமாகத் தடுத்தார் சிமோன்.

முன்னதாக, ஸ்பெயினின் அய்மெரிக் லப்போர்ட்டேவும் பந்தை கோல் கம்பத்தில் உதைத்து, ஒரு பெனால்டி வாய்ப்பை வீணடித்திருந்தார்.

கடந்த பத்தாண்டுகளில் ஸ்பெயின் காற்பந்துக் குழு வென்ற முதல் கிண்ணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மொயீன் அலிக்கு அபராதம்

பர்மிங்ஹம்: இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

இம்மாதம் 16ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலிக்கு ஆட்டத்தொகையில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ஒரு தகுதியிழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டது.

போட்டியின் இரண்டாம் நாளில் பந்துவீசியபோது தனது கையை உலர்ந்த நிலையில் வைத்திருக்க உதவும் திரவத்தை மொயீன் அலி பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது.

இடையில் சில காலம் ஒதுங்கியிருந்த மொயீன் அலி, இப்போட்டியின் மூலமாக மீண்டும் டெஸ்ட் அரங்கில் கால்பதித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!