தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலியா முன்னிலை

1 mins read
ea991898-a72c-4d10-96f2-0f5a2e94fb7e
வெற்றியைக் கொண்டாடும் ஆஸ்திரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் (வலது), நேதன் லயன். - படம்: ராய்ட்டர்ஸ்

பர்மிங்ஹம்: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றது.

இதனையடுத்து, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 393 ஓட்டங்களையும் ஆஸ்திரேலியா 386 ஓட்டங்களையும் எடுத்தன.

இரண்டாம் இன்னிங்சில் இங்கிலாந்து 273 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பரபரப்பான ஐந்தாம் நாளில், எட்டு விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்களை எடுத்து வாகை சூடியது ஆஸ்திரேலியா.

முதல் இன்னிங்சில் 141 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்சில் 65 ஓட்டங்களையும் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 28ஆம் தேதியன்று தொடங்கும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்