தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சவூதி செல்லும் மேலும் ஒரு காற்பந்து நட்சத்திரம்

1 mins read
08bab8c6-d99d-4721-a8d9-ffe566585a4a
2016ஆம் ஆண்டில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் விருதை வென்ற லெஸ்டர் சிட்டி குழுவில் இருந்தவர் கான்டே. - படம்: ஏஎஃப்பி

லண்டன்: சவூதி அரேபிய காற்பந்துக் குழுவான அல்-இட்டிஹாட்டில் சேர்கிறார் செல்சி நட்சத்திரம் இங்’கோலா கான்டே.

ஏழு ஆண்டுகளாக செல்சியில் விளையாடிவந்த பிரெஞ்சு வீரரான கான்டே, அல்-இட்டிஹாட்டில் மூன்றாண்டுகளுக்கு விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

மற்றொரு பிரான்ஸ் நட்சத்திரமும் பேலன் டியோர் விருதையும் வென்ற கரீம் பென்ஸீமாவும் அண்மையில் அல்-இட்டிஹாட்டில் சேர்ந்தார்.

2022ஆம் ஆண்டில் போர்ச்சுகல் நட்சத்திரமான 38 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியக் குழுவான அல் நாசரில் சேர்ந்தார்.

அதைத் தொடர்ந்து பல மூத்த நட்சத்திரங்களும் பல்வேறு சவூதி அரேபியக் குழுக்களில் சேர்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்