பிரேசிலை அதிரவைத்த செனகல்

பிரேசிலை அதிரவைத்த செனகல்

1 mins read
1f7b084f-3b97-4abb-8c75-2cf6220560c0
பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் போட்டதைக் கொண்டாடும் செனகல் வீரர்கள். - படம்: இபிஏ

லிஸ்பன்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஆக அதிக முறை வாகை சூடியிருக்கும் பிரேசிலை எதிர்பாரா விதமாக வென்றுள்ளது ஆப்பிரிக்க அணியான செனகல்.

4-2 எனும் கோல் கணக்கில் செனகல் வென்றது.

11வது நிமிடத்தில் முன்னுக்குச் சென்றது பிரேசில்.

அதற்குப் பிறகு 55வது நிமிடத்துக்குள் செனகல் 3-1 எனும் கோல் கணக்கில் முன்னணி வகித்தது.

58வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கை 3-2 ஆனது.

எனினும், ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கி வெற்றியை உறுதிப்படுத்தியது செனகல்.

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற இந்த நட்புமுறை ஆட்டத்தில் செனகலுக்கு இரண்டு கோல்களைப் போட்டார் முன்னாள் லிவர்பூல் நட்சத்திரம் சாடியோ மானே.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுகாற்பந்து