200வது ஆட்டத்தில் கோல் போட்ட ரொனால்டோ

200வது ஆட்டத்தில் கோல் போட்ட ரொனால்டோ

1 mins read
28d2e365-cfc5-4fb4-886b-245ab6af74dc
ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கோலைப் போட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ. - படம்: இபிஏ

ரெக்யாவிக்: ஐஸ்லாந்துக்கு எதிரான யூரோ காற்பந்துப் போட்டி தகுதிச் சுற்று ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டுள்ளது போர்ச்சுகல்.

அந்த ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்டவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

89வது நிமிடத்தில் கோல் போட்டார் ரொனால்டோ.

இந்த ஆட்டம், 38 வயது ரொனால்டோ போர்ச்சுகலுக்கு ஆடிய 200வது ஆட்டம்.

‘ஜே’ பிரிவில் இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வென்றிருக்கிறது போர்ச்சுகல்.

இப்பிரிவில் இதுவரை ஆடிய நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்விகண்டுள்ளது ஐஸ்லாந்து.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுகாற்பந்து