தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பார்சிலோனாவில் இணையும் மேன்சிட்டி குழுத் தலைவர்

1 mins read
07adad9b-0b69-4b29-8a7f-ada6cf1c8a68
குண்டோவனுக்கு பார்சிலோனா மூன்று ஆண்டுகால ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக நம்பப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவின் மத்தியத் திடல் ஆட்டக்காரரான இல்க்காய் குண்டோவன், பார்சிலோனாவுக்கு மாறவிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்சிலோனா குழு அவருக்கு மூன்று ஆண்டுகால ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக நம்பப்படுகிறது. சிட்டி உடனான ஒப்பந்தம் ஜூன் இறுதியில் முடிவடையும்போது பார்சிலோனாவுக்கு அவர் மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேன்சிட்டி குழுத் தலைவரான குண்டோவனுக்கு ஓராண்டு புதிய ஒப்பந்தம் வழங்க சிட்டி முன்வந்ததாகக் கூறப்படுகிறது. ஒப்பந்தத்தை மேலும் 12 மாதங்களுக்கு நீட்டிக்கவும் தெரிவு வழங்கப்பட்டிருந்தது.

செல்சி ஆட்டக்காரர் மட்டியோ கொவாசிச்சை £30 மில்லியனுக்கு (S$50 மி.) மேன்சிட்டி ஒப்பந்தம் செய்ய, அதே நாளில் குண்டோவன் பார்சிலோனாவுக்கு மாறுவதாக அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்