நெதர்லாந்தைத் தோற்கடித்த இலங்கை

1 mins read
e3eb5e40-6341-44c1-a45a-51707032d9c7
நெதர்லாந்துக்கு எதிராகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற இலங்கை அணி. - படம்: ஏஎஃப்பி

ஹராரே: உலகக் கிண்ண சூப்பர் சிக்ஸ் கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை, நெதர்லாந்து அணிகள் வெள்ளிக்கிழமை மோதின. பூவா தலையாவில் வென்ற இலங்கை முதலில் பந்தடித்தது.

இலங்கை அணி 47.4 ஓவர்களில் 213 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 96 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திக்குமுக்காடிய நிலையில் தனஞ்செயா - ஹசரங்கா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. தனஞ்செயா 93 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

நெதர்லாந்து சார்பில் லோகன் வான் பீக், பாஸ் டி லீடே தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து, 214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பந்தடித்தது. வெஸ்லி 52 ஓட்டங்களும் பாஸ் டீ லீட் 41 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஸ்காட் எட்வர்ட்ஸ் களம் இறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எட்வர்ட்ஸ் 67 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், நெதர்லாந்து அணி 40 ஓவர்களில் 192 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இலங்கை அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குறிப்புச் சொற்கள்