லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டன் தாம்சனை வென்றுள்ளார் செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிச். இது, ஜோக்கோவிச் வென்றுள்ள 350வது கிராண்ட் சிலாம் ஆட்டம்.
விம்பிள்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நடப்பு வெற்றியாளரான ஜோக்கோவிச், தாம்சனுக்கு எதிரான ஆட்டத்தில் அயராது ஊழைக்கவேண்டியிருந்தது. எனினும், வெற்றிபெறும் வாய்ப்புகள் ஜோக்கோவிச்சுக்கே அதிகம் இருந்ததுபோல் தென்பட்டது.
6-3, 7-6(4), 7-5 எனும் ஆட்டக்கணக்கில் வென்றார் ஜோக்கோவிச். இந்த வெற்றியின் மூலம் அவர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.
ரோஜர் ஃபெடரர், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் மட்டுமே 350 கிராண்ட் ஸ்லாம் ஆட்டங்களை வென்றிருந்தனர். இப்போது அவர்களுடன் இணைகிறார் 36 வயது ஜோக்கோவிச்.
இதையும் மிஞ்சும் இலக்குடன் இருக்கிறார் ஜோக்கோவிச்.