மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் கலந்துகொள்ளும் இந்திய அணியை புதன்கிழமை அறிவித்தது.
அதில் முன்னணி ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, விராத் கோஹ்லி இடம்பெறவில்லை.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா, ரவி பிஷ்னாய், சஞ்சு சாம்சன், யஷ்யஸ்வி ஜேய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் அணியில் சேர்க்கப்படவில்லை.
அணியை ஹர்த்திக் பாண்டியா வழிநடத்துகிறார். சூர்யகுமார் யாதவ் அணியின் துணைத்தலைவராகச் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.