லண்டன்: பிரிட்டிஷ் எஃப் 1 கார் பந்தயத்தில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம் பிடித்து வாகை சூடினார். தொடர்ந்து ஆறாவது முறையாக அவர் வெற்றியைப் பதவி செய்துள்ளார்.
தொடர்ச்சியாக 11 பந்தயங்களில் ரெட் புல் அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு நடைபெற்ற பத்து பந்தயங்களில் எட்டு பந்தயங்களை வெர்ஸ்டப்பன் கைப்பற்றினார்.
மெக்லேரன் அணியின் லாண்டோ நோரிஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.