தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்பெயினைத் தோற்கடித்து கிண்ணம் ஏந்திய இங்கிலாந்து

1 mins read
6b481584-6db4-4804-8041-b111953e4073
ஸ்பெயினுக்குக் கிடைத்த பென்லாடி வாய்ப்பை முறியடித்த இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜேம்ஸ் டிராஃபர்ட். - படம்: இபிஏ

பட்டுமி: 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐரோப்பியக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கிண்ணம் ஏந்தியது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அது ஸ்பெயினை 1-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.

ஆட்டத்தின் 99வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை ஸ்பெயின் அணித் தலைவர் அபெல் ருயிஸ் எடுத்தார். அவர் அனுப்பிய பந்து வலைக்குள் சென்றுவிடாதபடி பார்த்துக்கொண்டார் இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜேம்ஸ் டிராஃபர்ட்.

குறிப்புச் சொற்கள்