தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் தொடக்கம்

1 mins read
2862984e-7436-4a50-be29-45302cb4bd85
இந்திய அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடும் ரோகித் சர்மா (நடுவில்) - படம்: ராய்ட்டர்ஸ்

டொமினிகா: இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் புதன்கிழமை தொடங்குகிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கைத் தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோசமாக தோல்வி கண்ட இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதிலிருந்து மீண்டு இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது வரிசையில் விளையாடும் புஜாரா இத்தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் இடத்தில் இடம் பெறப்போவது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் சேர்க்காதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் அவர் ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்