தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘யுனைடெட்டுக்கு புதிய உத்வேகத்தை கொடுப்பார் மவுண்ட்’

1 mins read
508b345b-e167-4333-83ea-112b2748f2ee
செல்சியிடமிருந்து 45 மில்லியன் பவுண்ட்ஸுக்கு வாங்கப்பட்ட மவுண்ட் தனது அறிமுக ஆட்டத்தில் சிறப்பாக ஆடினார் என்று கருதப்படுகிறது. - படம்: இணையம்

மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் மத்திய திடலுக்கு மேசன் மவுண்ட் புதிய உத்வேகத்தைக் கொடுப்பார் என்று அக்குழுவின் நிர்வாகி எரிக் டென்ஹாக் கூறியுள்ளார்.

புதன்கிழமை இரவு நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் 24 வயது மவுண்ட் முதல் 45 நிமிடங்களுக்கு விளையாடினார். அந்த ஆட்டத்தில் யுனைடெட் 2-0 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் யுனைடெட் குழுவை வென்றது.

செல்சியிடமிருந்து 45 மில்லியன் பவுண்ட்ஸுக்கு வாங்கப்பட்ட மவுண்ட், தனது அறிமுக ஆட்டத்தில் சிறப்பாக ஆடினார் என்று கருதப்படுகிறது. இடைவேளைக்குப் பிறகு யுனைடெட் குழுவில் 11 மாற்றங்கள் செய்யப்பட்டன.

“மத்திய திடல் ஆட்டக்காரரான மவுண்ட், தாக்குதலில் சிறப்பாக பங்களிக்கக்கூடியவர்,” என்று கூறிய டென்ஹாக், “மத்திய திடலில் நீங்கள் விளையாடினால் நீங்கள் தற்காப்பிலும் தாக்குதலில் ஈடுபடக்கூடியவராக இருக்க வேண்டும். அந்தத் தகுதி மவுண்ட்டுக்கு இருப்பதால், அவர் பிரகாசிப்பார்,” என்றும் கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்