பேராசிரியர் கையை வெட்டிய வழக்கில் 6 பேர் குற்றவாளிகள்: என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு

பேராசிரியர் கையை வெட்டிய வழக்கில் 6 பேர் குற்றவாளிகள்: என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு

1 mins read
34c316cf-cb7b-41b8-b4a4-7dd3672c3a36
பேராசிரியர் டி.ஜே.ஜோசப் - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள நியூமன் கல்லூரி பேராசிரியர் டி.ஜே.ஜோசப்பின் வலது கையை கடந்த 2010 ஜூலை 4ஆம் தேதியன்று பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த சிலர் வெட்டினர்.

இந்த வழக்கு, கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் விடுவிக்கப்படுவதாகவும், 6 பேர் குற்றவாளிகள் என்றும் நீதிமன்றம் கூறியது.

கொலை முயற்சி, சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அந்த 6 பேரும் குற்றவாளிகள் என என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனில் கே பாஸ்கர் தீர்ப்பளித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்