தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட்: அஸ்வின் அசத்தல்

2 mins read
717d66c8-007f-4aa3-803d-818fb4aa02d5
அஸ்வின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். - படம்: ஏஎஃப்பி

முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின்  இந்தியாவிற்காக அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அசத்தலாக பந்து வீசிய அஸ்வின் 12 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

அதன் மூலம் அனைத்துலக கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் 709 விக்கெட்டுகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். இதுவரை அஸ்வின் 271 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே 401 ஆட்டங்களில் விளையாடி 953 விக்கெட்டுகள் வீழ்த்தி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

அனைத்துலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக முறை  5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் அஸ்வின் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறினார்.  அஸ்வின் இதுவரை 34 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

67 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்  முத்தையா முரளிதரன். இரண்டாவது இடத்தில் சேன் வார்ன் 37 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அஸ்வின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார் அஸ்வின்.

இரண்டு டெஸ்ட் போட்டிக் கொண்ட இத்தொடரில் தற்போது இந்திய அணி 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்