மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவின் முன்னாள் ஆட்டக்காரர் பெஞ்சமின் மெண்டி, மாது ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தது, மற்றொரு பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டது ஆகிய குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
2020 அக்டோபரில் தமது வீட்டில் 24 வயது மாது ஒருவரைத் தாக்கியதாக மெண்டி, 28, மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மற்றொரு 29 வயது மாதைப் பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதாகவும் மெண்டி மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
பிரான்ஸ் நாட்டவரான மெண்டி குற்றவாளி அல்ல என தீர்ப்பளிக்கப்பட்டபோது அவர் உணர்ச்சி பொங்க கண்ணீர் வடித்தார்.

