தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாதனையை நோக்கி ஜோக்கோவிச்

1 mins read
6a3ae36f-033b-4aa6-b8cc-63f5ddb5f289
ஜோக்கோவிச் இதுவரை 7  விம்பிள்டன் பொதுவிருதுகளை வென்றுள்ளார். - படம்: இபிஏ-இஎஃப்இ

லண்டன்: டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிச் தொடர்ந்து ஐந்தாவது முறையாக விம்பிள்டன் பொதுவிருதின் இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை நடக்கவிருக்கும் இறுதியாட்டத்தில் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள கார்லஸ் அல்காரசை  சந்திக்கிறார். 

இரண்டு வீரர்களும் வெள்ளிக்கிழமை இரவு நடந்த அரையிறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இறுதிசுற்றுக்கு முன்னேறினர்.

வேகமாக விளையாடக்கூடிய 20 வயது அல்காரசை விவேகமாக ஆடக்கூடிய ஜோக்கோவிச் எப்படி சமாளிப்பார் என்பதைக் காண டென்னிஸ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதற்கு முன் இரு வீரர்களும் பிரெஞ்சுப் பொதுவிருதின் அரையிறுதியில் சந்தித்தனர். அதில் ஜோக்கோவிச் வெற்றிபெற்றார்.

விம்பிள்டன் பொதுவிருதின் ஆடவர் பிரிவில் நடப்பு வெற்றியாளரான ஜோக்கோவிச் இதுவரை 7  விம்பிள்டன் பொதுவிருதுகளை வென்றுள்ளார். 

ஆண்கள் பிரிவில் அதிக பொதுவிருதுகள் வென்றவர்கள் பட்டியலில் ஜோக்கோவிச் 23 விருதுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

குறிப்புச் சொற்கள்