தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரேஷ்ஃபர்ட்டின் யுனைடெட் ஒப்பந்தம் 2028 வரை நீட்டிப்பு

1 mins read
84f02d12-6211-46d0-bd2f-fab4413dd214
2016ல் யுனைடெட்டிற்காக களமிறங்கியதிலிருந்து அக்குழுவிற்காக கிட்டத்தட்ட 360 முறை ரேஷ்ஃபர்ட் விளையாடியுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு உடனான தமது ஒப்பந்தத்தை 2028 ஜூன் வரை மார்கஸ் ரேஷ்ஃபர்ட் நீட்டித்துள்ளார்.

ரேஷ்ஃபர்ட்டின் முந்தைய ஒப்பந்தம் 2024ல் காலாவதியாக இருந்தது. 2016ல் யுனைடெட்டிற்காக களமிறங்கியதிலிருந்து அக்குழுவிற்காக கிட்டத்தட்ட 360 முறை ரேஷ்ஃபர்ட் விளையாடியுள்ளார். அனைத்துப் போட்டிகளிலும் 123 கோல்களை அவர் போட்டுள்ளார். அவற்றில் 30 கோல்களை 2022-23 இங்கிலிஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) பருவத்தில் அவர் போட்டார். இபிஎல் பட்டியலில் மூன்றாம் இடத்துடன் கடந்த பருவத்தை யுனைடெட் நிறைவு செய்தது.

குறிப்புச் சொற்கள்