தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிஎஸ்ஜி குழுவில் எம்பாப்பேக்கு இடமில்லை

1 mins read
196ca221-ec2a-4fd0-91b2-a40e78afa680
கிலியன் எம்பாப்பே - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: அடுத்த காற்பந்துப் பருவத்திற்குத் தயாராவதற்காக ஜப்பானுக்கும் தென்கொரியாவிற்கும் செல்ல இருக்கிறது பிரான்சின் பிஎஸ்ஜி குழு.

இந்நிலையில், பிஎஸ்ஜி சார்பில் அதிக கோல்களை அடித்துள்ள பிரெஞ்சு ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே, அதன் சுற்றுப்பயணக் குழுவில் இடம்பெறவில்லை.

அடுத்த கோடைப் பருவத்துடன் பிஎஸ்ஜியுடனான எம்பாப்பேயின் ஒப்பந்தம் முடிவடையவுள்ளது. அதனால், ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திடும்படி எம்பாப்பேயை பிஎஸ்ஜி வலியுறுத்தி வருகிறது. ஆனால், எம்பாப்பே அதனை ஏற்க மறுத்து வருகிறார்.

அவர் ஸ்பெயினின் ரியால் மட்ரிட் குழுவிற்கு இடமாற முயன்று வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், இன்னும் ஓராண்டிற்கு பிஎஸ்ஜியில் நீடிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்