ஆஷஸ் கிண்ணத்தைத் தக்கவைத்தது ஆஸ்திரேலியா

1 mins read
ab4d5f29-0208-44b3-a5fa-f1a04c95a9fb
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் மழையால் முற்றிலுமாகக் கைவிடப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: மழை கைகொடுக்க, ஆஷஸ் கிண்ணத்தைத் தக்கவைத்துக்கொண்டது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தின் ஒருபகுதியும் ஐந்தாம் நாள் முழுவதுமாகவும் மழையால் தடைபட்டதால் ஆஸ்திரேலியா தோல்வியிliருந்து தப்பியது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 317 ஓட்டங்களும் இங்கிலாந்து 592 ஓட்டங்களும் எடுத்தன.

275 ஓட்டங்கள் பின்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணி, நான்காம் நாள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதனால், போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

முதலிரு போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தும் வென்றன. இதன் காரணமாக, ஆஸ்திரேலியா 2-1 எனத் தொடரில் முன்னிலையில் உள்ளது.

இம்மாதம் 27ஆம் தேதி தொடங்கும் கடைசி, ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்றாலும், கடந்த ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியதால் கிண்ணம் அதன் வசமே இருக்கும்.

குறிப்புச் சொற்கள்