டரூபா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி, மூன்றாவது போட்டியில் இந்திய அணி 200 ஓட்ட வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் தொடரையும் 2-1 என்ற கணக்கில் அவ்வணி கைப்பற்றியது.
தொடரின் கடைசி ஆட்டத்தில் முதலில் பந்தடித்த இந்தியா ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ஓட்டங்களைக் குவித்தது. அவ்வணியில் ஆக அதிகமாக தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் 85 ஓட்டங்களை எடுத்தார்.
இன்னொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் 77 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஹார்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பின்னர் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் 151 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோற்றுப்போனது. இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் ஷார்துல் தாக்குர் நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
அடுத்ததாக, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி வியாழக்கிழமை நடக்கவுள்ளது.