மார்கஸ் ரேஷ்ஃபர்ட்டின் 40 கோல் இலக்கு

மார்கஸ் ரேஷ்ஃபர்ட்டின் 40 கோல் இலக்கு

1 mins read
6865ddca-65a9-4048-881f-50b71934ce34
வெயின் ரூனியின் சாதனையை முறியடிக்க முனைப்புடன் இருக்கும் மார்கஸ் ரேஷ்ஃபர்ட். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் அடுத்த பருவத்தில் 40 கோல்கள் போட்டு சாதனை படைக்க மான்செஸ்டர் யுனைடெட்டின் நட்சத்திர வீரர் மார்கஸ் ரேஷ்ஃபர்ட் இலக்கு கொண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது, யுனைடெட்டின் முன்னாள் நட்சத்திர வீரரான வெயின் ரூனியின் சாதனையை முறியடிக்கவும் ரேஷ்ஃபர்ட் முனைப்புடன் உள்ளார்.

இதுகுறித்து ரூனியின் ஆதரவு தமக்கு இருப்பது தெரிந்து மார்கஸ் ரேஷ்ஃபர்ட் உற்சாகமடைந்துள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்காக ரூனி 253 கோல்கள் போட்டுள்ளார். யுனைடெட்டுக்காக ஆக அதிக கோல்கள் போட்ட வீரர் எனும் பெருமை அவரைச் சேரும்.

இதற்கிடையே, கடந்த பருவத்தில் யுனைடெட்டுக்காக ரேஷ்ஃபர்ட் 30 கோல்கள் போட்டார். இதுவரை அவர் யுனைடெட்டுக்காக 123 கோல்கள் போட்டுள்ளார்.

அண்மையில் அவர் யுனைடெட்டுடனான ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

குறிப்புச் சொற்கள்