தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டென்மார்க் தாக்குதல் ஆட்டக்காரரை ஒப்பந்தம் செய்த மேன்யூ

1 mins read
8b71b081-d28f-4609-b9eb-f803528eef92
ராஸ்மஸ் ஹோய்லண்ட் - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: டென்மார்க்கைச் சேர்ந்த தாக்குதல் ஆட்டக்காரரை மான்செஸ்டர் யுனைடெட் 64 மில்லியன் பவுண்டுக்கு (S$109.3 மில்லியன்) ஒப்பந்தம் செய்துள்ளது.

20 வயது ஹோய்லண்ட் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்பு இத்தாலியின் அட்டலாண்டா குழுவுக்காக விளையாடிக்கொண்டிருந்தார்.

சிறு வயதிலிருந்தே யுனைடெட்டின் ரசிகராக இருந்து வருவதாகவும் அக்குழுவில் இணைந்திருப்பது தமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும் ஹோய்லண்ட் தெரிவித்தார்.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் புதிய பருவம் தொடங்குவதற்கு முன்பு தமது தாக்குதல் பிரிவை வலுப்படுத்த யுனைடெட் விரைகிறது.

கடந்த பருவத்தில் லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தை யுனைடெட் பிடித்தது. இருப்பினும், 58 கோல்கள் மட்டுமே அக்குழுவால் போட முடிந்தது. முதல் இடம்பிடித்த மான்செஸ்டர் சிட்டியைவிட அது 36 கோல்கள் குறைவு.

குறிப்புச் சொற்கள்