பொக்கெட்டினோவை நம்பியிருக்கும் செல்சி

பொக்கெட்டினோவை நம்பியிருக்கும் செல்சி

1 mins read
4531f626-da67-4d25-a8e7-542988767191
மொரிசியோ பொக்கெட்டினோ - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் கடந்த பருவத்தில் செல்சி எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படவில்லை. அதற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

38 லீக் ஆட்டங்களில் செல்சி வெறும் 38 கோல்களைப் போட்டது.

இந்நிலையில், அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர் மொரிசியோ பொக்கெட்டினோவை அது ஒப்பந்தம் செய்துள்ளது. செல்சியை மீண்டும் அவர் உச்சம் எட்ட வைப்பார் என்று குழுவின் நிர்வாகம் மட்டுமன்றி ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், இரண்டு புதிய தாக்குதல் ஆட்டக்காரர்களையும் செல்சி ஒப்பந்தம் செய்துள்ளது. விலாரியாலிருந்து நிக்கலஸ் ஜேக்சனும் ஆர்பி லைப்ஸிக்கிலிருந்து கிறிஸ்டஃபர் என்குன்குவும் செல்சியில் இணைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்