சென்னை: நடப்பு ஆசிய வெற்றியாளர் கிண்ண ஹாக்கி தொடரில் இந்திய ஹாக்கி அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஏழாவது ஆசிய வெற்றியாளர் கிண்ண ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கில் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 12ஆம் தேதிவரை நடைபெறும் இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன.
இத்தொடரில் இதுவரையில் மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி இரு ஆட்டங்களில் வென்று, ஓர் ஆட்டத்தில் சமநிலை கண்டுள்ளது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி ஏழு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்திய அணி தனது நான்காவது ஆட்டத்தில் திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு நடப்பு வெற்றியாளரான தென்கொரியாவுடன் மோதவிருந்தது. புதன்கிழமை பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி பொருதுகிறது.